உலோகங்கள் மற்றும் பொருட்கள் அரிமானத்  தடுப்புத்துறை - செயல்திறன

சி. இ. சி. ஆர். ஐ ன் உலோக மற்றும் பொருட்கள் அரிமானத் தடுக்கும் துறையின் செயல் வல்லமைகள்

 • கட்டமைப்புகளின் தற்போதையே நிலை பற்றிய மேலீடான ஆய்வு

 • புதிய கட்டமைப்புகளின் உலோக அரிமானம் மற்றும் வலிமைத் தன்மையைக் கண்காணித்தல்.

 •  கட்டமைப்புகளின் எஞ்சியுள்ள ஆயுட்காலத்தை உலோக அரிமான விகிதத்தின் அடிப்படையில் மதிப்பிடுதல்.

 •  கான்கிரிட் மற்றும் இரும்புக் கம்பிகளின் மேற்பரப்பில் பூசப்படும் வண்ணப்பூச்சுக்  கலவைகளின் தன்மையை மதிப்பாய்வு செய்தல்

 • அடிக்கட்டுமானங்களின் எதிர்மின்வாய் பாதுகாப்பு

 • உலோக அரிமானத்தால் பழுதடைந்த கட்டமைப்புகளை பழுது பார்த்தால் மற்றும் மறுசீரமைத்தல்

 • கழிவுப் பொருட்களை கட்டுமானங்களுக்கு பயன்படுத்துதல்

 • பாலங்கள் மற்றும் கட்டுமான கட்டமைப்புகளை நிகழ்நிலை மூலம் கண்காணித்தல்

 • கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகளைப் பாதுகாக்க துருப்பிடிக்காத வண்ணப்பூச்சுகளை உருவாக்குதல்

 • கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகளை பாதுகாப்பதற்கான உலோக அரிமானக் குறைப்பான்களை உருவாக்குதல்

 • உலோக அரிமானக் குறைப்பான்கள் மற்றும் சிமெண்ட் பூச்சு பூசப்பட்ட இரும்புக்  கம்பிகளை மதிப்பாய்வு செய்வதற்கான பரிசோதனை வசதிகள்

 • எதிர்மின்வாய் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு நேர்மின்வாய் உலோகங்களை உருவாக்குதல்

 • துணைநேர்மின்வாய் உலோகக்கலவை மூலம் டிசி மின்சாரத்தை செலுத்தி எதிர்மின்வாய் பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்களை உருவாக்குதல்

 • எதிர்மின்வாய் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை வடிவமைத்தல்

 • மண்ணின் தடுப்பு செயல்திறன் நுண்மங்களின் பகுப்பாய்வு மின்னூட்ட  அளவை அளத்தல்,  நேர்மின்வாய் உலோகத்தின் செயல்திறன்,  பொருட்களின் மேற்பரப்பில் பூசப்பட்ட வண்ணப்பூச்சுகளின் படலம்,  எதிர்மின்வாய் வினைகள் மூலம் உரிதல் மற்றும் எண்ணைக்குழாய்களில் திரவங்களின் ஓட்டத்தைக் கண்டறிதல் போன்ற பல்வேறு வகையான பரிசோதனைகளின் சேவைகள்

 • உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளில் இறுக்கவிசை  / பாரவிசை மற்றும் உலோக அரிமானம் இணைந்து நிகழ்வதால் அவற்றில் ஏற்படும் விரிசல்கள் பற்றிய பரிசோதனைகள்