விரிவாக்க மையங்கள்:  சென்னை - கண்ணோட்டம்

CSIR-மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.இ.சி.ஆர்.ஐ) மெட்ராஸ்யூனிட், 1971 இல் சென்னை தரமணியில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் காரைக்குடியில் அமைந்துள்ளது. இது ஒரு துணை நிலை ஆராய்ச்சி மையமாகும், இந்த ஆராய்ச்சி மையத்தில், அதாவது பரந்த அளவிலான மின்வேதியியல் சக்தி அமைப்புகளை உள்ளடக்கிய எரிபொருள் செல்கள் (Fuel cells) மற்றும் பேட்டரிகள் (Batteries) ஆராய்ச்சிகளையும் மற்றும் மேற்கூறிய சாதனங்களின் மின்வேதியியல் ஆற்றல் வழங்கும் அமைப்புகளுக்கான புதிய மற்றும் செயல்பாட்டு ரீதியாக செலவு குறைந்த பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறது.

இந்த மையத்தில்- (Fuel cells and Batteries) எரிபொருள் கலங்களுக்கு மாற்று சவ்வு எலக்ட்ரோலைட்டுகள் (Polymer Electrolyte) எலக்ட்ரோஆக்டிவ்வினையூக்கிகள்மற்றும் செல்ஸ்டேக் (Cell stack) அடுக்கின் செயல்திறன் மற்றும் ஆயுள் சோதனை பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி சவ்வு மின்முனை கூட்டங்களை (PEMFC ) மற்றும் (DMFC) உருவாக்கியுள்ளது.


பேட்டரி:
புதிய தலைமுறை பேட்டரிகளான லித்தியம் அயன் பேட்டரி, (18650 Cylindrical cell)  மற்றும்  Prismatic cell, சோடியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் சல்ஃபர் பேட்டரி போன்ற உயரிய தொழில்நுட்பங்களில் முதன்மையான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது.