இயக்குநரின் அலுவலக குறிப்பு


அன்புள்ள சி.எஸ்.ஐ.ஆர்-சிக்ரி குடும்பத்திற்கு,

சி. எஸ். ஐ. ஆர் – சிக்ரி தொலை நோக்குத் தலைவர்கள் மற்றும் பரோபகாரி வள்ளல் டாக்டர். ஆர். எம். அழகப்பச் செட்டியார் ஆகியோரது அபரிமிதமான ஆதரவையும், ஆசிகளையும் பெற்ற மின்வேதியியல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் அதன் தனித்துவமான வலிமைக்கு நன்கு அறியப்பட்ட ஆய்வக நிறுவனமாகும். தத்தம் கல்வி மற்றும் / அல்லது பயிற்சியால் மின்வேதியியலாளர்கள் ஆகிய நாம் தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுமையும் தூய்மையான, பசுமையான, உமிழாத மற்றும் பூஜ்ய கார்பன் தொழில் நுட்பங்களைத் தேடும் நிலையில் அவை மின்வேதியியலின் அடிப்படையில் தனிப் பயனாக்கப்பட்ட தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் சாத்தியமாகும் என்பதை நிரூபிப்பதன் மூலம் மிகவும் பெருமிதம் அடைகிறோம். செக்ரி ஆய்வகத்தில் தனிப்பட்ட ஆராய்ச்சிப் பிரிவுகளான அரிமானம் மற்றும் பொருள் பாதுகாப்பு, மின்வேதியியல் சக்தி ஆதாரங்கள், மின்வேதியியல் செயல் முறைபொறியியல், எலக்ட்ரோடிக்ஸ் மற்றும் மின்னாற்பகுப்பு, மின்கரிம மற்றும் பொருள் மின்வேதியியல் & மின்முலாம்ப்பூசுதல் மற்றும் மெட்டல் பினிஷிங் ஆகியவை சமூக, உள்நாட்டு, மூலோபாய மற்றும் தொழில் துறை சவால்களையும் அவ்வப்போது எழும் சிறப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றன. எளிமையான, எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொருளாதார ரீதியாக சாத்தியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல மின்வேதியியல் செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உந்துதலோடு பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் மற்றும் மனித சமுதாயத்தின் இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றமுடியும் என்பதில் நாம் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாறிவரும் வேகமான வாழ்க்கை முறை மற்றும் இந்த நவீன மின் உபகரணங்களால் ஆளப்படும் உலகத்தின் அசாத்திய தேவைகளையும் பூர்த்தி செய்ய இதையே மிகச் சரியான தருணமாக எடுத்துக் கொண்டு மின்வேதியியல் செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்களின் மூலம் சந்தர்பத்திற்கு ஏற்ப மெய்பித்து, செயல்படுத்தி நம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியப் படுத்திக் காட்டமுடியும். இந்தப் பயிற்சியே சி. எஸ். ஐ. ஆர் – செக்ரி ஐ பெரிய அளவில் நிலையான சேவை வழங்குநராக உலக அளவில் எல்லாக் காலச் சூழ்நிலைகளிலும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒத்திசைவு மாதிரி ஆராய்ச்சிக் கூடமாக நிலைப்படுத்திக்கொள்ள உதவும். மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவற்கு ஏதுவாக நம்மை நாம் மறு ஒப்படைப்புடன், அர்ப்பணிப்புடன் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன் செயல்பட தயார் செய்வோமாக...
மேற்குறிப்பிட்ட முயற்சிகளில் என்னுடன் இணைந்து பணியாற்றிட தங்களின் நிபந்தனையற்ற ஆதரவினைக்கோருகிறேன்.