மின்முலாம் பூசுதல் மற்றும் உலோக சீரமைப்பு துறை- கண்ணோட்டம்

மின்முலாம் பூசுதல் மற்றும் உலோக சீரமைப்பு துறையானது மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னோடி துறைகளில் ஒன்றாகும். இத்துறையில் மின்முலாம் பூச்சு, மின்னுலோகவியல் மற்றும் வெற்றிடமுறை பூச்சுகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன. மேலும் இத்துறை, மேற்பரப்பு பொறியியல், உலோகவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையின் நிபுணத்துவங்கள் பின்வருமாறு,


• நீர் மற்றும் நீர் அல்லாத மின் பகுளிகளை பயன்படித்தி உலோகங்கள், உலோககலவைகள், பல்லடுக்குகள் மற்றும் கலப்புரு மின்முலாம் பூசுதல். மின்மெருகூட்டல், மின்னுருவாக்கல் மற்றும் நேர்மின்முனை பூச்சு சார்ந்த ஆராய்ச்சிகள்.
• மின் வண்ணமாக்கல், ஒளிமின்வேதி, வெப்பத்தடை, உயிர்மருத்துவ உள்ளீடு மற்றும் நுண்ணுயிர்-எதிர்ப்பு போன்ற பயன்பாட்டிற்கான ஒளிபுகு-மின்கடத்தும் ஆக்சைடு, உலோக சால்கோஜனைடு மற்றும் உலோக / உலோககலவை நைட்ரைடு பூச்சுகள்.
• உயர்வெப்ப மின்னுலோகவியல் முறைகளான உருகிய-உப்பு மின்னாற்தேற்றல் மற்றும் ஆக்சிஜன்-ஒடுக்க பரவல் நுட்பத்தை பயன்படுத்தி ஸ்ராடஜிக் பயன்பாட்டிற்கான இலகு- மற்றும் அரியமண்- உலோகங்களை உருவாக்கல். அயல்நாட்டு இறக்குமதிக்கு மாற்றாக, இரும்புசார், இரும்பல்லா- மற்றும் அரியமண்-உலோகங்களை குறைந்த தர இந்திய தாதுகள் மற்றும் தொழிற்ச்சாலை கழிவுகளில் இருந்து நீர்மின்னுலோகவியலை பயன்படுத்தி உருவாக்கல்.

வாடிக்கையாளர்கள்:

தனியார் நிறுவனங்கள்

ஸ்ராடஜிக் துறைகள்

 • போயிங் நிறுவனம்
 • டாட்டா எஃகு நிறுவனம்
 • ஹிந்துஸ்தான் துத்தநாக நிறுவனம்
 • அப்ளைடு மெட்டிரியல்ஸ் நிறுவனம்
 • கெயில் நிறுவனம்
 • யுனைடெட் பாஸ்பரஸ் நிறுவனம்
 • லாம் ஆராய்ச்சி நிறுவனம்
 • பைமெட்டாலிக் பேரிங்க்ஸ் நிறுவனம்
 • டி டி கே ஹெல்த்கேர் நிறுவனம்
 • எல் ஜி பாலக்கிருஷ்ணன் நிறுவனம்
 • தீப் கட்டுமான நிறுவனம்
 • ஆர் எஸ் தொழில்நுட்ப நிறுவனம்

 

 • டி.எல் – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
 • டி.எம்.ஆர்.எல் – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
 • அணுசக்தி துறை – இந்திய அரியமண் நிறுவனம்
 • ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலை
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – ஐ.பி.ஆர்.சி.