மின்வேதியியல் செயல்முறை பொறியியல் துறை - கண்ணோட்டம்

இந்த துறையானது குளோரேட் - அம்மோனியம் பெர்க்ளோரேட் மற்றும் கார, காரபூமி உலோகங்களின் பெர்க்ளோரேட்டுகள் போன்ற கனிம வேதிப்பொருட்களின் மின்தொகுப்பு ஆராய்ச்சிகளில் முக்கியகவனம் செலுத்துகிறது. மேலும் இந்த துறையானது கனிம வேதிப்பொருட்களின் மின்தொகுப்பில் பயன்படும் மின்முனை பொருட்கள் உருவாக்கம் மீதும் கவனம் செலுத்துகிறது.


முக்கிய ஆராய்ச்சி சிறப்பம்சங்கள்:  ஹைட்ரஜன் தயாரித்தல்
• பி.இ.எம் அடிப்படையிலான நீர் மின்னாற்பகுத்தல்
• மூலக்கூறு வினையூக்கத்தால் நீரினை ஒளிவேதியியல் ஆக்ஸிஜனேற்றம் செய்தல்
• செயல்பாட்டு மின்- வினையூக்கிகள் மற்றும் நூதனமான கலப்பு மின்பகுளிகளை கொண்டு நீரினை ஆக்ஸிஜனேற்றம் செய்தல்
• ஏ.இ.எம் அடிப்படையிலான உயர் உலோகமற்ற, நூதனமான மின்வினையூக்கிகள் மற்றும் எதிர்மின்மங்களை பரிமாற்றம் செய்யும் சவ்வுகளைக் கொண்டு நீரினை மின்னாற்பகுத்தல் .


தூய்மை சுற்றுச்சூழலுக்கான மின்வேதியியல் செயல்முறைகளை உருவாக்குதல், உதாரணமாக மின்-ஆக்சிஜனேற்ற முறையில் குடிநீர்மற்றும் கழிவு நீர் சுத்திகரித்தல், மின்-ஆக்ஸிஜன் ஒடுக்கம், மின்உறைதல் ஆக்ஸிஜனேற்றிகளின் மின்தொகுப்பு (ஓசோன், ஹைபோகுளோரைட், ஹைட்ராக்சைல் ரேடிக்கல் போன்றவை) மற்றும் மேம்பட்ட மின்வேதியியல் ஆக்ஸிஜனேற்ற செயல்முறைகள்


3டி உலோக அச்சிடும் தொழில்நுட்பத்தை கொண்டு உருவான டைட்டானியம் மற்றும் கலப்பு உலோகங்கள் அடிப்படையிலான எலும்பு மற்றும் பல்உள்வைப்புகள், கட்டமைப்பியல் தேர்வுமுறை மூலம் இலகுரக உலோக கட்டமைப்பை உருவாக்குதல், செயல்முறை அளவுரு தேர்வு முறை மூலம் புதியபொருட்களை உருவாக்குதல்


வேதியியல் மற்றும் மின்வேதியியல் அணுகுமுறை மூலம் சிறந்த உயிரி இணக்கத்தன்மை, எதிர்நுண்ணுயிர் செயல்பாடு மற்றும் ஆஸ்டியோ ஒருங்கிணைப்பிற்காக தனிப்பயனாக்கப்பட்ட எலும்பு உள்வைப்புகளை நானோ கட்டமைக்கப்பட்டு பூசப்பட்ட அடுக்குகளைக் கொண்டு மேற்பரப்பு மாற்றம் செய்தல்


உயிரி செயல் திறன் கண்ணாடி, கண்ணாடி பீங்கான்கள், உயிரி மக்கும் பலபடிகள், மின்சுற்றுமுறையில் தயாரிக்கப்பட்ட கலப்பு இழைகளின் தொகுப்பு மற்றும் எலும்பு திசுபொறியியல் பயன்பாடுகளுக்கான 3டி சாரக்கட்டுகளை உருவாக்குதல்்


நானோ பீங்கான் பூசப்பட்ட உலோக சாரக்கட்டுகள், பலபடி சாரக்கட்டுகளின் செயற்கை கல முறை உயிரிசெயல்பாடு ஆய்வு, எலும்பு செல் - சாரக்கட்டுகளுக்கு இடையே உள்ள தொடர்பினை செல் ஒட்டுதல், பெருக்கம், மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் மூலமாக விலங்கு மாதிரியில் ஆய்வுக்கு உட்படுத்தி மதிப்பிடுதல்


3டி பலபடி அச்சிடும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவான உயிரிபலபடி / பலபடிகலவை அடிப்படையிலான எலும்பு உள்வைப்புகள், கட்டமைப்பியல் தேர்வுமுறை மூலம் இலகுரக பலபடி கட்டமைப்பை உருவாக்குதல், செயல்முறை அளவுரு தேர்வுமுறை மூலம் புதிய பலபடி பொருட்களை உருவாக்குதல்


உயிரி-பெறப்பட்ட மற்றும் பெட்ரோ-கெமிக்கல் மூலப்பொருள் அடிப்படையிலான நூதனமான, பயனுள்ள மக்கும் பலபடிகள் மற்றும் அவற்றின் வழித்தோன்றல்கள் தயாரித்தல்; செயலாக்கமிக்க மறுசுழற்சி தொழில்நுட்பம் மூலம் மக்காத பலபடிகளை பயனுள்ள பொருட்கள் மற்றும் இரசாயனங்களாக மாற்றுதல்; CO2, H2, பயோகாஸ் வாயு பிரித்தல், சேமித்தல், மற்றும் செறிவூட்டல்


குளோர்-அல்கலி கலன்களுக்கு செயல்பாட்டு கார்பன் அடிப்படையிலான ORR வினையூக்கிகளை உருவாக்குதல்


இரும்பு அல்லாத உலோகங்களை (தாமிரம், வெள்ளி, தங்கம்) மீட்டெடுப்பதற்கான மின்வேதியியல் உலைகள் / செயல்முறைகளை உருவாக்குதல்; உதாரணமாக, தொழிற்சாலை கழிவு நீரோடை கலவைகளின் வெவ்வேறு (மற்றும் ஏற்ற இறக்கமான) நிலைகள் காரணமாக, மின்வேதியியல் தொழில்நுட்பங்களைச் சார்ந்த தனிப்பயனாக்கப்பட்ட செயல்முறைகள் உருவாக்குதல் அவசியமாகிறது. மேலும் மின்வேதியியல் உலைகளை தீர்மானிக்க, வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்முறைகளால் முன் மற்றும் பிந்தைய சுத்திகரிப்பு முறைகள் ஆராயப்படுகின்றன.


• அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகளை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலையில் உபயோகப்படுத்தப்பட்ட எட்சென்ட் கரைசலிருந்து தாமிரத்தை மீட்டெடுத்தல்
• தாமிரத்தகடு, கம்பிகள், மற்றும் செப்புபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பயன்படும் பிக்ளிங் கரைசல்களில் இருந்து தாமிரத்தை மீட்டெடுத்தல்
• தொழிற்சாலை செயல்முறை கழிவுகளிலிருந்து தங்கத்தை மீட்டெடுத்தல்
• தொழிற்சாலை செயல்முறை கழிவுகளிலிருந்து வெள்ளியை மீட்டெடுத்தல்
• மின் வேதியியல் முறைகள் மூலம் தொழிற்சாலை கழிவு நீர் சுத்திகரிப்பு