ஆய்வுத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குழு (பிபிஎம்ஜி)

ஆய்வகங்களின் தலையாயப் பணியாக அரசு மற்றும் நிதி வழங்கும் துறைகளிடம் ஆய்வுக்கான முன்மொழித் திட்டம் தயாரித்து அதற்கான போதிய நிதியைப்பெற்று ஆய்வு நடத்துவதாகும். அந்த நோக்கில், ஆய்வுத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதன்மைப் பணியாக அரசு வழங்கும் பல்வேறு ஆய்வுத்திட்டங்களை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பை வகிக்கிறது. குறிப்பாக, அவ்வப்போது ஆய்வுத் திட்ட முதன்மை ஆய்வாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, ஒவ்வொரு ஆய்வுத்திட்டத்தினையும் துவக்கம் முதல் அதன் முன்னேற்றத்தினை கண்காணிப்பது, திட்ட வரவு செலவு பற்றிய அறிக்கை தயார் செய்வது மற்றும் திட்ட நிறைவு அறிக்கையைப் பெற்று அரசுக்கு சமர்ப்பிப்பது போன்றவைகள் இதன் முக்கியப் பணிகளாகும். மேலும் அரசுக்கு அவ்வப்போது தேவைப்படும் தகவல்களை தருவது, அரசு வெளியிடும் ஆய்வுத்திட்டங்கள் பற்றிய நடவடிக்கைகளை விஞ்ஞானிகளுடன் பகிர்வது, மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், பரப்புவதற்கும் ஒரு மையப் புள்ளியாகவும் (Nodal) விளங்குகிறது.

இக்குழுவின் பிற பணிகளான :

 • இவ்வாய்வகத்தின் முக்கிய செயல்பாடாக வருடம் இருமுறை ஆராய்ச்சிக் குழு (Research Council) கூட்டத்தை நடத்துதல். மேலும் ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையில் விஞ்ஞானிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் தகுந்த ஏற்பாடுகள் செய்தல்

 • சிக்ரி ஆய்வகத்தின் ஆண்டறிக்கை தொகுத்தல், அச்சு வடிவம் கொடுத்தல், அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல்.

 • ஆய்வுத் திட்டங்களின் நிதி மறுவடிவம் செய்தல்

 • ஆய்வு நிதியின் அடிப்படையில் ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், வேதிப்பொருட்கள், மற்றும் ஆய்வக உட்கட்டமைப்புக்குத் தேவையான பொருட்கள் கொள்முதல் செய்தல் மற்றும் அதற்கான விண்ணப்பங்களை விஞ்ஞானிகளிடமிருந்து பெறுவது மற்றும் கண்காணிப்பது.

 • பெரும்பான்மையான நிர்வாகப் பொறுப்புகளை கையாளுதல்.

 • நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்திசெய்தல்.


ஆகியவை இக்குழுவின் முக்கியப் பணிகளாகும்


  தொடர்புகொள்ள:

  டாக்டர் எஸ். சத்தியநாராயணன்
  தலைமை விஞ்ஞானி & தலைவர், பிபிஎம்ஜி
  மின்னஞ்சல்: satya [at] cecri.res.in; ppmg [at] cecri.res.in
  தொலைபேசி எண்: 04565-241522, 241246
  தொலைநகல்: 04565-227651