சிக்ரிக்கு வர வழிகள்


விமானம் மூலம்

காரைக்குடிக்கு அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி மற்றும் மதுரையில் உள்ளது. இந்த இரண்டு விமான நிலையங்களும் காரைக்குடியிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீ தொலைவில் உள்ளன, மேலும் சென்னை, மும்பை மற்றும் புது தில்லியில் இருந்து நேரடி விமான சேவைகளைக் கொண்டுள்ளன. திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, குவைத், கொழும்பு மற்றும் கோலாலம்பூரிலிருந்து சர்வதேச விமானங்களும் உள்ளன.

ரயில் மூலம்

காரைக்குடி ரயில் சந்திப்பு சென்னை- ராமேஸ்வரம் ரயில் பாதை வழியாகவும், மயிலாடுதுறை - காரைக்குடி ரயில் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காரைக்குடிக்கு பல நேரடி ரயில்கள் உள்ளன. வாரணாசி, புவனேஸ்வர் போன்ற புனித இடங்களிலிருந்து காரைக்குடிக்கு ரயில்கள் உள்ளன. காரைக்குடி ரயில் சந்திப்பு சி.எஸ்.ஐ.ஆர்-சிக்ரி வளாகத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோ ரிக்‌ஷா மூலம் வளாகத்தை எளிதில் அடையலாம்.

சாலை வழியாக

சென்னை, பெங்களூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரைக்குடிக்கு இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மதுரையிலிருந்து காரைக்குடிக்கு பேருந்துகள் கிடைக்கின்றன. மதுரையில் உள்ள எம் .ஜி .ஆர் பேருந்து நிலையத்திலிருந்து , எந்த நேரத்திலும் பேருந்தில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லலாம். சி.எஸ்.ஐ.ஆர்-சிக்ரி காரைக்குடி புதியபேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது, மேலும் ஆட்டோ அல்லது டாக்ஸி கட்டணம் சுமார் ரூ .100 ஆகும்.