திறன் மேம்பாட்டு பயிற்சிப் பிரிவு - பயிற்சி திட்டங்கள்
தொழிற்சாலை / கல்விக்கூடம் / தொழில்நுட்பம் சார்த்த புத்துணர்வூட்டும் வகுப்புகள்   

சி.எஸ்.ஐ.ஆர். மத்திய மின்வேதியல் ஆய்வகம் ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆராய்ச்சி நிறுவனம். அது கிழ் கண்ட எல்லா விதமான மின் வேதியியல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்து உள்ளது. இது தனது புத்துணற்சியுட்டும் பயிற்சி வகுப்புகளை கிழ்காணும் துறைகளில் நடத்திக்கொண்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் சுய தொழில் முனைவோர்/ தொழிற்சார் மேலாளர்/ கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் எதிர்மின்வாய் பாதுகாப்பு மற்றும் குழாய்கள் வழிகளில் அறிமானக் தடுப்பு, அரிமானம் ஏற்படுவதற்கான அடிப்படையும் மற்றும் இயந்திர தொழில்நுட்பங்களும், அரிமானத் தடுப்பில் வர்ணங்கள் மற்றும் வர்ணப்பூச்சுக்களின் பயன்பாடு, மின்வேதியல் எரிவூட்டு கட்டமைப்பு: காரீய மின்கலங்கள் மற்றும்  லிதியம் அணு மின்கங்கள், மின்முலாம் பூசுதல்- குறிகோள்கள் மற்றும் பயன்பாட்டு முறைகள், கழிவு நீர்: சுத்திகரிப்பு மற்றும் அதற்க்கான தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுக்கான மேற்ப்புற பூச்சுக்கள் & பகுப்பாய்வு கருவிகளின் இயங்கு முறையும் மற்றும் பேணிப் பாதுகாக்கும் முறையும் .

பயிற்சி குறியீட்டு எண்

பயிற்சியின் விரிவான பெயர் 

பயிற்சியின் காலம்

CSE 1

அரிமானம் ஏற்படுவதற்கான அடிப்படையும் மற்றும் அதற்கான இயந்திர தொழில்நுட்பங்களும்

ஒரு வார காலம்

CSE 2

எதிர்மின்வாய் பாதுகாப்பு மற்றும் குழாய்களின் வழிகளில் அறிமானத் தடுப்பு

ஒரு வார காலம்

CSE 3

அறிமானத் தடுப்பு வர்ணங்கள் மற்றும் வர்ணப்பூச்சுக்களின் பயன்பாடு

ஒரு வார காலம்

ECPS 1

மின்வேதியல் எரிவூட்டு கட்டமைப்பு: காரீ ய மின்கலங்கள்

ஒரு வார காலம்

ECPS 2

மின்வேதியல் எரிவூட்டு கட்டமைப்பு: லித்தியம்-அணு மின்கலங்கள்

ஒரு வார காலம்

EMFT

மின்முலாம் பூசுதல் - குறிகோள்கள் மற்றும் பயன்பாட்டு முறைகள்

ஒரு வார காலம்

ECMS

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான மேற்ப்புற பூச்சுக்கள்

ஒரு வார காலம்

EPC

கழிவு நீர் : சுத்திகரிப்பு மற்றும் அதற்கான தொழில்நுட்பபங்கள்

ஒரு வார காலம்

CIF

பகுப்பாய்வு கருவிகளின் இயங்கு முறையும் மற்றும் பேணிப் பாதுகாக்கும் முறையும்

ஒரு வார காலம்

பொது குறிப்புக்கள்:


 • ஆங்கில மொழிக் கல்வி / பயிற்சிகள்
 • இதன் பதிவு விண்ணப்பம் ஏற்பது, இப்பயிற்சியின் ஆரம்ப  நாளிலிருந்து  10 தினங்களுக்கு முன்பாக நிறுத்தப்படும்
 • எல்லா பயிற்சி பட்டறை வகுப்புகளும் 15 நபர்களுக்கு குறையாமல் இருந்தால் மட்டுமே நடத்தப்படும்; பயிற்சி பெற விரும்புவோர் , துறைத் தலைவர், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், சி. எஸ். ஐ. ஆர். சிக்ரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ள அறிவுருத்தப்படுகிறார்கள்
 • ஒரு முறை செலுத்தப்பட்ட பயிற்சி கட்டணம் எக் காரணத்தை கொண்டும் / எந்தச் சுழ்நிலையிலும் திரும்பி வழங்கப்பட மாட்டாது
 • தொழிற்சாலை மற்றும் தொழில் முனைவோருக்கு ஏற்ப வடிவமைக்கபட்ட புத்துணர்வு பயிற்சிகளை அவர்களின் தொழிற்சாலையின் வளாகத்தில் வந்து நடத்தி தரவும் தயாராகவுள்ளோம்.
 • எல்லா  கொள்கை முடிவுகளும் சி. எஸ். ஐ. ஆர்., சிக்ரி, இயக்குனரால் மட்டுமே கட்டுபடுத்த படுகிறது / அதே இறுதி முடிவாகவும் ஏற்றுக்கொண்டு நடைமுறை படுத்தப்படும்.

 

பயிற்சி கட்டணம் விபரம்


 • ஒரு தனி நபருக்கான பயிற்சி கட்டணம் ரூ . 17,700/- (ரூபாய் பதினேழாயிரத்து எழு நூறு) மட்டும்/ ஒரு புத்துணர்வு பயிற்சிக்காக பெற்றுகொள்ளப்படுகிறது. இந்த தொகையில் 18%  GST- யும் அடங்கும்.

 • வெளிநாட்டு குடிமகனுக்கு ஒரு தனி நபருக்கு ரூ. USD 1000. இந்த பயிற்சி கட்டனத்திலிருந்து பயிற்சி குறிப்புக்கள், பயிற்சி கட்டுரைகள், பயிற்சி உபகரணங்கள் , மத்திய உணவு , காலை/மாலை  சிற்றுண்டி , பயிற்சிக்கான சான்றிதல்/சி.எஸ்.ஐ.ஆர். சிக்ரி- யின் மற்ற யூனிட் ஐ காணும் வசதி (அ) எதாவது தொழில் பேட் டையை  காண, முடிந்தால் ஏற்பாடு செய்யபடுகிறது.

 • பயிற்சிக்கான கட்டணம் பயிற்சி ஆரம்ப தினத்திலிருந்து 15 நாட்களுக்கு முன்பாக செலுத்தப்பட வேண்டி அறிவுறுத்தப் படுகிறது. அதை  wire transfer/ NEFT முறையில் மின்னணு பணப் பரிவர்த்தனை செய்யவும் முடியும். அனைத்து  பணப் பரிவர்த்தனைகளும் இயக்குனர், சி.எஸ்.ஐ.ஆர்., சிக்ரி என்ற முகவரிக்காண வங்கி கணக்கில் முலமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

 • சி.எஸ்.ஐ.ஆர்., சிக்ரி-யின் வங்கி கணக்கின் விபரங்கள்


  Bank Details

தங்கும்  விடுதி வசதி :

பயிற்சியாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் எங்கள் ஆய்வகத்தின் விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்து தருவோம். இந்த விடுதியில் ஒரு அறையில் இருவர் பகிர்ந்து கொளும்படியான வசதிகளே உள்ளது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.100/மட்டும் வசூலிக்கப்படுகிறது.  உணவு மற்றும் சிற்றுண்டி உங்கள் வேண்டுதலுக்கு/தேவைக்கு ஏற்ப வசதி செய்து தரப்படும். அதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்தி இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எங்கள் நிறுவனம் 300 எக்கர் நிலப்பரப்பில் விரிவான உள்கட்டமைப்புடன், பறந்து விரிந்த பசுமை சூழ்ந்த, காட்சிக்கு உகந்த, பல வகை பறவைகள், காட்டு உயிரினங்களுடன் இயற்கையான முறையில் அமையப்பெற்று ஒரு வளாகத்தினுள் அமைத்துள்ளது. இந்த பசுமை நிறைந்த சிக்ரி வளாகம், மாசற்ற சூழலில் தங்குவதற்கு ஏதுவாக அமையபெற்றுள்ளதே இதன் தனிச்சிறப்பு.


சி.எஸ்.ஐ.ஆர் - சிக்ரியில் ஒருகிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள்

சி.எஸ்.ஐ.ஆர்.-ன் ஒருகிணைந்த திறன் மேம்பாட்டு முயற்சியின் அடிபடையில் சி.எஸ்.ஐ.ஆர். சிக்ரி-யிலும் பல திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் 10th / 12th/ ITI/ Polytechnic மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பயிற்சிகள் கிராமப்புற சமுதாய மக்கள் யாரெல்லாம் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்தவர்கள், கல்வியில் நலிந்தோர்கள் / ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது


தமிழ் வழி பயிற்சி வகுப்புகள் (நிலை 1, II, & III)


 1. கந்தக அமில மின்கலங்கள் : பாதுகாப்பு மற்றும் பேணுதல்
 2. லித்தியம் அணுமின்கலங்கள் : அறிவியலும் & தொழில்நுடப்பமும்
 3. மின்முலாம் பூசுதல் மற்றும் உலோக புறத்தீட்டுதல் முடிவுநிலை
 4. அரிமான தடுபிற்கான : வர்ணங்கள் மற்றும் வர்ணபுச்சுகள்
 5. நூற்பாலை மற்றும் தோல்பதனிடும்  அலைக் கழிவு நீரை சுத்திகரிக்கும் தொழில் நுட்பங்கள்
 6. பகுப்பாய்வு கருவிகளின் இயங்கு முறையும் மற்றும் பேணிப் பாதுகாக்கும் முறையும்

ஆங்கில வழி பயிற்சி வகுப்புகள் : நிலை IV, V, VI, & VII


மேற்குறிப்பிட்ட அணைத்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் இளநிலை/ முதுநிலை/ சுயதொழில் முனைவோர்/புதிய தொழில் தொடங்க முனைவோர் ஆகியோருக்காக நடத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பயிற்சியானது பொறியியல் மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை ஊக்குவிகின்றது.


பி.சி.எஸ்.சி குழுமத்தில் பதிவு மற்றும் அங்கிகாரம் பெற்ற பயிற்சி வகுப்புகள்

   1. உதவி அலங்காரச் சாயப்பூச்சு வினைஞர் 
   2. அலங்காரச் சாயப்பூச்சு வினைஞர் 
   3. பாதுகாப்பான மற்றும் கடல்சார் வர்ணபுச்சு வினைஞர்


தொடர்புக்கு
முனைவர் எஸ். எம். ராஜேந்திரன்,
மூத்த முதன்மை விஞ்ஞானி &  தலைவர்,
திறன் மேம்பாட்டு பயிற்சிப் பிரிவு
சி. எஸ். ஐ. ஆர். - மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி  நிறுவனம் , காரைக்குடி
மின்அஞ்சல் : skill@cecri.res.in; smrajendran@cecri.res.in
கைப்பேசி எண்: 8675677493, தொலைபேசி : 04565 241521

ஜிக்யாசா

மாணவர் - விஞ்ஞானி இணைப்பு திட்டம்:

              “ஜிக்யாசா”  என்பது  தேசிய அளவில் சி.எஸ்.ஐ.ஆர்  அதன் அறிவியல் சமூக பொறுப்புணர்வை (எஸ்.எஸ்.ஆர்) மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் மேற்கொண்ட முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இந்த திட்டம் ஒருபுறம் ஆர்வத்தையும்  மறுபுறம் விஞ்ஞான இயல்பையும் வளர்க்கும்.
கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்), கேந்திரியா வித்யாலயா சங்கதன்களுடன் (கே.வி.எஸ்) இணைந்து மாணவர்-விஞ்ஞானி இணைப்பு திட்டத்தை ‘ஜிக்யாசா’ அறிமுகப்படுத்தியுள்ளது; வகுப்பறை கற்றல் விரிவாக்குவதும், நன்கு திட்டமிடப்பட்ட ஆராய்ச்சி ஆய்வக அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்துவதும் இதன் ஒரே நோக்கமாகும்.
               ஜூலை 06, 2017 அன்று சி . எஸ். . ஆர். மற்றும் கே. வி. எஸ். இடையே புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஏற்ப்பட்டது . இதன்படி பள்ளி குழந்தைகளின் இளம் மனதை விஞ்ஞான சிந்தனையை  நோக்கி செலுத்துவதற்கான வழிமுறையை செயல்படுத்துகிறது . இதன்  மூலம் அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதும் சமூகத்தின் முன்னேற்றதுக்காக ஒப்பீட்டு நன்மைகளைப் பயன்படுத்துவதாலும் குழந்தைகளுக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது . இத்திட்டத்தின் நோக்கமானது பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞான மனநிலையைச் சேர்ப்பதற்க்கும் , ஆசிரியர்களின் மனதை  தூண்டுவதற்க்கும் அறிவியல் , தொழில் நுட்பம் மற்றும் புதுமைகளை பிரபலப்படுத்துவதும் ஆகும் .
              இத்திட்டம் மாணவர்களுக்கு கல்வி ஆதரவை வழங்கும் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விஞ்ஞான திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் அவர்களின் கல்வி  மற்றும் ஆய்வக உறவுகளை மேம்படுத்த உதவும்.
                இத் திட்டத்திலிருந்து கல்வியல் பரிசோதனைகளை மற்றும் கண்டுபிடிப்புகளை    ஊக்குவிக்கும் மற்றும் புதிய மாணவர் தொழில் முனைவோரின் தோற்றத்தை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது .
                மாணவர் குடியிருப்பு நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக விஞ்ஞானிகள், ஆய்வக குறிப்பிட்ட செயல்பாடுகள் / ஆன்சைட் பரிசோதனைகள், பள்ளிகள் / அவுட்ரீச் திட்டங்கள், ஆய்வக நிறுவன நாள் விழா, ஆசிரியர்களுக்கான பட்டறைகள், சிறப்பு கோடை விடுமுறை திட்டங்கள், செய்முறை பயிற்ச்சிகள், அறிவியல் மற்றும் கணித கிளப்புகளுக்கு விஞ்ஞானிகளின் வருகைகள், தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் டிங்கரிங் ஆய்வகங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
               2017 செப்டம்பரிலிருந்து 1801 மாணவர்களும், 313 ஆசிரியர்களும் 33 திட்டங்கள் மூலம் பயனடைந்து உள்ளனர்.


மேலும் தொடர்புக்கு:


முனைவர் ச. அங்கப்பன்:
முதன்மை விஞ்ஞானி மற்றும் ஜிக்யாசா ஒருங்கிணைப்பாளர்
மைய வேதியியல் ஆய்வகம்
காரைக்குடி- 630 003
கைபேசி ; 9994614582, மின்னஞ்சல் :  angappan@cecri.res.in