உலோக அரிமான சோதனை மையம்:  மண்டபம் - உள்கட்டமைப்புகள்

அடிப்படை வசதிகள்:

இந்த ஆய்வக வளாகத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் கடல் சார்ந்த உலோக அரிமான வளிமண்டல காற்றின் பரிசோதனைத் திடல் அமைந்துள்ளது. இதுவே இம்மையத்தின் மிகப் பெரிய பரிசோதனை வசதியாகும்.  இந்த பரிசோதனையில் நடக்கும் ஆய்வுகள் அங்கு நிறுவியுள்ள வளிமண்டலவியல் கருவிகள் மூலம் கிடைக்கும் தகவல் பெட்டகத்தின் உதவியுடன் பரிசீலிக்கப்படுகிறது. இங்குள்ள ஸ்டீபன்சன் அறையானது உள் அரங்கினுள் பொருட்கள் மற்றும் மேற்பரப்பு வண்ணப்பூச்சுக் கலவைகளின் அரிமானத் தன்மையை மதிப்பாய்வு செய்யப்பயன்படுகிறது. மேலும் ஆழம் குறைந்த கடற்கரை பகுதியானது கடல் நீரில் மூழ்கியுள்ள உலோகங்கள்,  பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் உலோக கலவைகள் மற்றும் பொருட்களின் அரிமானம் மேலும் கடல்வாழ் உயிரினங்கள் ஓட்டுவதால் உண்டாகும் வலிமைத் தன்மை இழப்பை அறிய பயன்படுகிறது. இம்மையத்தின் ஆய்வகச் சாலையில் பொருட்காட்சி அறை உருவாக்கப்பட்டு அங்கு கடல் சார்ந்த உலோக அரிமானத்தின் முக்கியத்துவம் மற்றும் இந்த மையம் அமைந்ததின் சிறப்பம்சம் ஆகியவற்றை வரை படங்கள் / நிழற் படங்கள் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது. இது அங்கு வருகை தரும் பார்வையாளர்கள் மாணவர்கள் மற்றும் உலோக அரிமான சிறப்பு பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு மிகவும் தன்விளக்கம் தரும் வகையில் உள்ளது

இந்த மையத்தில் நடக்கும் ஆராய்ச்சிப் பணிகளை ஆதரிக்கத் தேவையான பரிசோதனை மற்றும் உபகரணங்கள் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக. கடல் சார்ந்த உயிரியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வுக்கூட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் மெதுவான நீரோட்டம் உள்ள வேகத்துடன் கடல் நீரை செலுத்தி உலோகங்கள் மற்றும் பொருட்கள் மீது உயிரியல் படலம் உண்டாக்கும் வசதிகள் உள்ளது.

கேம்ரி மின்வேதியியல் ஆய்வுக்கருவி மற்றும் நீருக்கடியில் ஒளியை அளக்க உதவும் கருவி; மிகவும் குறிப்பிடத்தக்க பயன்பாட்டிலுள்ளது.  இங்குள்ள முழு அளவிலான பணிமனையானது சோதனைத் தகடுகள்,  மிதவை சட்டகங்கள் மற்றும் சோதனைகள் செய்யத் தேவையான பல்வேறு வடிவமைப்புகளைத் தயாரிக்க வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட தகடுகள் அதன் பண்புகளை நன்கு உணர்ந்து கொள்வதற்கு பதப்படுத்தப்பட்டு சி. இ.  சி. ஆர். ஐ கரைக்குடியிலுள்ள உயர் கருவிகளைக் கொண்டு ஆய்விக்க  உதவியாய் உள்ளது. இந்த ஆய்வகம் தற்பொழுது மிகப் பெரிய அளவில் நவீன மயமாக்கப் பட்டு வருகிறது.