மண்டபம் மையத்தின் செயல் வல்லமைகள்:
மண்டபம் மையத்தின் தனித்துறை சிறப்பறிவுத் திறமை மற்றும் செயல் வல்லமைகள் பரிசோதனை மற்றும் மதிப்பாய்வு மேலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி; கீழ்க்கண்ட வரிசைப் படுத்தப்பட்டுள்ள பிரிவுகளை உள்ளடக்கியதாகும்:
- கடல் சார்ந்த வளிமண்டல காற்றில், உலோகங்கள் மற்றும் உலோகம் அல்லாத பொருட்களுக்கு ஏற்படும் அரிமானம்
- கடல் நீரில் மூழ்கி உள்ள உலோகங்கள் மற்றும் உலோகம் அல்லாத பொருட்களின் வலிமை இழப்பு மற்றும் அரிமானம்
- கடல்வாழ் உயிரினங்களின் ஒட்டுதலால் ஏற்படும் அரிமானம் மற்றும் உயிரியல் / நுண்ணுயிரியல் பக்க விளைவால் ஏற்படும் அரிமானம்
- ஆக்ஸைடு படலம் படிந்த மற்றும் அப்படலம் சீர்குலைந்த துருப்பிடிக்காத இரும்பின் தன்மைகள்
- கடலில் மூழ்கி உள்ள உலோகக் கட்டமைப்புகளின் எதிர்மின்வாய் பாதுகாப்பு