மின்வேதியியல் செயல்முறை பொறியியல் துறை - செயல்திறன
பாலிமர் எலக்ட்ரோலைட் மெம்பிரேன் வாட்டர் எலக்ட்ரோலைசர்(PEMWE) 

ஆற்றல் பற்றாக்குறை சிக்கல்களைத் தீர்க்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஆர்வங்கள் அதிகரிப்பது ஹைட்ரஜன் தொடுவானத்தை முன்னணியில் கொண்டு வந்துள்ளது. ஹைட்ரஜனானது ஆற்றல் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் அடுத்த தலைமுறை எரிபொருளாக கணிக்கப்படுகிறது. முரண்பாடாக, இது இயற்கையில் கிடைக்காத பொருளாக உள்ளது. எனவே, நீராவி மாற்ற முறை அல்லது பெட்ரோலிய சுத்திகரிப்பு மூலம் இதை உருவாக்க வேண்டும், மேலும் இது சுத்திகரிக்கப்பட வேண்டும். தூய்மையான ஹைட்ரஜனை நீர் மின்னாற்பகுப்பின் மூலம் உருவாக்க முடியும், ஆனால் இதனால் உருவாக்கப்படும் ஹைட்ரஜன் சுருக்கப்பட்ட / திரவமாக்கப்பட்ட வாயுவாக சேமிக்கப்பட வேண்டும், இது செலவு மிகுதியானதாகும்..


இந்த சவால்களை எதிர்கொள்ள, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், பூஜ்ஜிய மாசுபடுத்தும் செயல்பாட்டில் நீரிலிருந்து தூய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய பாலிமர் எலக்ட்ரோலைட் மெம்பிரேன் வாட்டர் எலக்ட்ரோலைசர் (PEMWE) பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை உள்ளடக்கியது. இந்த வாட்டர் எலக்ட்ரோலைசர் பாதுகாப்பான, சுத்தமான, நம்பகமான ஹைட்ரஜனை உருவாக்குகிறது. இன்றைய மற்றும் நாளைய ஹைட்ரஜன் தேவைகளை வெவ்வேறு ஒதுக்கீடுகளில் பூர்த்தி செய்ய. சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் 5Nm3 / h PEM அடிப்படையிலான ஹைட்ரஜன் ஜெனரேட்டரை உருவாக்கி வணிகமயமாக்கியது. வணிகமயமாக்கலுக்கு தொழில்நுட்பம் கிடைக்கிறது .

குடிநீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சிக்கான மின் வேதியியல் முறை

சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்நாட்டு மற்றும் சமூக அளவிலான பயன்பாட்டுக்கு குடிநீர் சுத்திகரிப்புக்கான அடிப்படை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக டி-ஃப்ளோரிடேட்டர், டி-ஆர்சனேட்டர் மற்றும் எலக்ட்ரோ-குளோரினேட்டர் ஆகியவை உருவாக்கப்பட்டு நிரூபிக்கப்படுகின்றன. எலக்ட்ரோ கெமிக்கல் டி-ஃப்ளோரிடேட்டர் குறித்த தொழில்நுட்பம் வணிகமயமாக்கப்பட்டது, மேலும் இது 20 லிட்டர் மற்றும் 200 லிட்டர் / மணிநேர ஓட்ட விகிதத்தில் குடிநீரில் இருந்து 5 பிபிஎம்-இல் இருந்து 1.0 பிபிஎம்-க்கும் குறைவான ஃவுளூரைடு உள்ளடக்கத்தை நீக்குவல்லது.
வணிகமயமாக்கலுக்கு தொழில்நுட்பம் கிடைக்கிறது.

                            தொழில்நுட்ப விபரங்கள்


ஆக்ஸிஜனேற்றிகளின் உற்பத்திக்கான மின் வேதியியல் முறை

பெராக்ஸோசால்ட்கள், பெராக்ஸோஹலோஜன்கள் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு, நீர் சுத்திகரிப்புக்கான ஓசோன் ஆகியவற்றின் உற்பத்தி


உலோகங்களை மீட்டெடுப்பதற்கான மின் வேதியியல் முறைகள் 

 இரும்பு அல்லாத உலோகங்களை (தாமிரம், வெள்ளி, தங்கம்) மீட்டெடுப்பதற்கான மின்வேதியியல் உலைகள் / செயல்முறைகளை உருவாக்குதல்


3டி உலோக அச்சிடும் தொழில்நுட்பம் 

வேதியியல் மற்றும் மின்வேதியியல் அணுகுமுறை மூலம் சிறந்த உயிரி இணக்கத்தன்மை, எதிர்நுண்ணுயிர் செயல்பாடு மற்றும் ஆஸ்டியோ ஒருங்கிணைப்பிற்காக தனிப்பயனாக்கப்பட்ட எலும்பு உள்வைப்புகளை நானோ கட்டமைக்கப்பட்டு பூசப்பட்ட அடுக்குகளைக் கொண்டு மேற்பரப்பு மாற்றம் செய்தல்


3டி பலபடி அச்சிடும் தொழில்நுட்பம்

3டி பலபடி அச்சிடும் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவான உயிரிபலபடி / பலபடிகலவை அடிப்படையிலான எலும்பு உள்வைப்புகள், கட்டமைப்பியல் தேர்வுமுறை மூலம் இலகுரக பலபடி கட்டமைப்பை உருவாக்குதல், செயல்முறை அளவுரு தேர்வுமுறை மூலம் புதியபொருட்களை உருவாக்குதல்