மின்னியக்கவியல் மற்றும் மின்னூக்கவினையியல் துறை- செயல்திறன்

மின்வினையூக்கம்: மின்வேதி உணரிகள், மின்னாற்றல் சேமிப்பு மற்றும் மின்மாற்றி கருவிகளின் உருவாக்கத்தில் திறம்படுத்தப்பட்ட மின்வினையூக்கிகளின் பயன்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆராய்ச்சி தளங்களில், புதுமையான மற்றும் நிலையான மின்வினையூக்கிகளைக் கண்டறிந்து பகுப்பாய்வது இத்துறையின் முக்கிய இலக்குகளாகும். மேலும், இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்வினையூக்கி மூலக்கூறுகளின் அடிப்படைத் தன்மைகளை அறிவதிலும் அதனால் பயனுறும் தொழில் நுட்பங்களை ஆராய்வதிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது.


மின்வினையூக்கம் தொடர்பான ஆராய்ச்சி சிறப்பம்சங்கள்:


 • ஹைட்ரஜன் வெளியேற்று வினை
 • உயிர்வளி  வெளியேற்று வினை
 • உயிர்வளி  ஒடுக்க வினை
 • நைட்ரோஜன் ஒடுக்க வினை
 • கரியமில வாயு ஒடுக்க வினை
 • உயிர்த்திரள் மின்வேதி மதிப்புக்கூட்டல்
 • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் மற்றும் சேமிப்பு

உயிர் உணரிகள் மற்றும் உயிர் படமுறையாக்கம்: சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்துறை ஆகியவற்றிற்கான செலவு குறைந்த உணர்திறன் கருவிகளை உருவாக்குவதற்கு  மின் வேதியியல் கருவிகளின் பெரிதும் உதவுகின்றன. மின்முனை  மேற்பரப்புகளில்  மீநுண் கட்டமைப்புகளை (தன்னியல்பு ஒற்றை மூலக்கூறுப் படலம், பல்படிப்  பொருட்கள் மற்றும் உயிரியல் பெருமூலக்கூறுகள்) பயன்படுத்தி உணரிகள் மற்றும் உயிர்-உணரி கருவிகள் உருவாக்குவதில் இத்துறை கவனம் செலுத்தி வருகிறது. மேம்படுத்தப்பட்ட வேதி தொகுதிப்பொருட்களைப் பயன்படுத்தி உயிர் படமுறையாக்கம் மற்றும் கண்ணறையின் வேதி மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதிலும் இத்துறை ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.


உயிர் உணரிகள் தொடர்பான ஆராய்ச்சி சிறப்பம்சங்கள்:


 • மண்வள உணரிகள்
 • நொதி மற்றும் நொதியற்ற உணரிகள்
 • இணக்க உணரிகள் (எதிர்ப்பு பொருள்  & டிஎன்ஏ உணரிகள்)
 • மூலக்கூறு அச்சிடப்பட்ட பல்படி உணரிகள்
 • காற்று மற்றும் நீர் தர கண்காணிப்புக்கான சுற்றுச்சூழல் உணரிகள்
 • ஒளி இயக்க உணரிகள் மற்றும் உயிர் படமுறையாக்கம்

உயிர் மின்வேதியியல் அமைப்புகள்: மின் வேதியியல் கருவிகளைப் பயன்படுத்தி உயிரியில் சார்ந்த ஆராய்ச்சியில் உயிரணு மற்றும் அதன் படலம், புரதங்களின் எதிர் மின்னேற்ற/இறக்க செயல்முறைகள், உயிரணுவின் இயற்பியல், மற்றும் உட்கருவுள்ள நரம்பணுவின் மூலக்கூறுகளை இத்துறை பகுப்பாய்வு செய்து வருகிறது.


உயிர் மின்வேதியியல் தொடர்பான ஆராய்ச்சி சிறப்பம்சங்கள்:


 • நோய் மற்றும் நோய் தொற்றிற்கான காரணிகளின் நிலைப்பாடுகளை அறிதல்
 • நுண்ணுயிர் எரிபொருள் கலன்
 • புரதங்களின் புறமுத்திரை மற்றும் மரபுமுத்திரை மாறுபாடு
 • உயிரிய மூலக்கூறுகளின் எதிர் மின்னேற்ற/இறக்க செயல்முறைகள்