மின்னியக்கவியல் மற்றும் மின்னூக்கவினையியல் துறை- கண்ணோட்டம்

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் முக்கிய அங்கமாகிய மின்னியக்கவியல் மற்றும் மின்னூக்கவினையியல் துறையானது பல்வேறு அடிப்படை மற்றும் பயனுறு அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. 'மின்னியக்கம்', 'மின்வினையூக்கம்', 'மின்பகுப்பாய்வு', 'புதுவகையான மின்முனைகள் ', 'மின்பகுளிகள்', 'மின்வேதி உ ணர் கருவி', மற்றும் 'மின் உயிர் உணர் கருவிகள் ஆகியவை இத்துறையின் குறிப்பிடத்தக்க ஆய்வுக்களங்களாகும். 'மின்முனை-மின்பகுளி' இடைமுக நிலையில் நடைபெறும் மின்னியக்கச் செயல்கள் மற்றும் அதன் வழிமுறைகளை அறிவதில் இத்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அடிப்படை ஆராய்ச்சி ஆய்வுகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட மின்வேதித் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இத்துறை ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது. மின்வேதியியல் அடிப்படையிலான ஒருங்கிணைக்கப்பட்ட நுட்பங்களாகிய நிறமாலை மின்வேதியியல், மின்வேதிநுண்ணோக்கி, மின்வேதி அணுவிசை நுண்ணோக்கி, மின்வேதிவொளிற்திறன், மேம்படுத்தப்பட்ட இராமன் நிறமாலையியல் ஆகியவற்றை பயன்படுத்தி மின்வேதி செயல்முறைகளின் அடிப்படை புரிதல்களை இத்துறை ஆராய்ந்து வருகிறது. சிற்றளவாக்க நுண்மின்முனைகள், ஒருங்கிணைக்கப்பட்ட பன்மின்முனையங்கள், அயனிசார்பு மின்முனைகள், உட்கண்ணறையின் மின்வேதியியல், திரவ-திரவ இடைமுகம், வளைதிறன் அச்சு மின்முனைகள், தொகுக்கப்பட்ட மூலக்கூறு மின்னுனரிகள், வேதி மின்தடையம், மற்றும் மின்வேதி திரிதடையம் போன்ற கருவிகளின் உருவாக்கத்தில் இத்துறை தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கீழே விவரிக்கப்பட்டுள்ள ஆரய்ச்சிப் பகுதிகள் இத்துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்திறன்களாகும்.