கருத்தரங்கு & பயிற்சி

திறன் இந்தியா பணி முயற்சி:
பண்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் உள்ள பல வகையான, கனக்கிலடங்கா திறமைகளை ஓருகிணைக்க, பாரத பிரதமரால் தொடங்கப்பட்டதே திறன் இந்தியா கட்டமைப்பு முயற்சி. இது 15th ஜூலை 2015-ல் தொடங்கப்பட்டது. இந்த பெருமுயற்சியில் தேசிய திறன் மேம்பாடு பயிற்சி, திறன் வளர்ப்பு கடன் திட் டம் , கிராமப்புற இந்தியா திறன் வளர்ப்பு மற்றும் பல இதில் அடங்கும்.

இந்த திட்டத்தின் முலம் 40 கோடி இளைஞர்களின் திறனை வேவ்வேறு துறைகளில் 2022- க்குள் மேம்படுத்ததிட இலக்கு நிர்நயிக்கபபட்டுள்ளது .  இந்த திட்டத்தின் மூலம் முக்கிய துறைகளான மின்சாரம் பல மின்னணுவியல் பொருட்கள், கட்டுமானம், போக்குவரத்து  மற்றும் நுற்பாலை போன்ற துறைகளில் தொழில் நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்தப் பணி கிராமப்புற, மற்ற நகர், பெருநகர் பகுதிகளை ஆக்கிரம் படுத்தும்.

இத்திட்டத்தில் முக்கிய பலன் / பயனளிப்பு, வேலை வாய்ப்பு, தொழில் முனைவோரின் தரம் முன்னேற்றம்/மேம்பாடு, தொலைத் தொடர்பு திறன், மேலாண்மை மற்றும் சுய தகுதி மேம்பாடு, தற்சாற்பு மற்றும் எல்லா துறைகளிலும் இனணயான வளர்ச்சியை எட்ட வழிவகை செய்கிறது.

இந்த திறன் மேம்பாட்டு வளர்ச்சி, எல்லா துறைகளிலும் எட்டுவதற்கான இந்த தொலை நோக்குப் பார்வை இந்த கால கட்டத்தின் முக்கியமான தருனமாகக் கருதப் படுகிறது. இந்த திட்டம் நாட்டின் மொத்த பொருளாதார நிலையினை, வளர்ச்சிப் பாதையை நோக்கி எடுத்து செல்லவும், கல்வி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பினை ஒருங்கினைப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதோடு, இந்தியாவினை உலகளவில் தலை சிறந்த ஒரு திறன் மேம்பாட்டு மையமாக திகழ வழிவகை செய்கின்றது.
திறன் மேம்பாட்டுத் திட்டமானது ஒரு திறமை வாய்ந்த கருவியாக மக்களை மேண்மை மிக்கவராக தகுதி பெறச் செய்தல், மக்களினிடையே பெருபான்மை ஒப்புதலை பெற துணை நிற்பதோடு, எந்த தொழில் துறை  முன்னேற்றத்துக்கும், சிறந்த பொருளாதார வளர்ச்சியை பரிசாக தருவதோடு, வேலை வாய்ப்பினையும் வளர்க்கிறது. தற்பொழுது இந்தியா ஒரு பெரு  வளர்ச்சியடையும் நாடாக உருவெடுத்து வருவதால் இதற்கு திறமை வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள், திறன் மிக்க வேலை ஆட்களோடு, ஒரு அறிவார்ந்த சமுதாயத்தையும் உருவாக்கும் தேவையில் இருக்கிறது.


சி.எஸ்.ஐ.ஆர்-ன்  ஒருகிணைத்த திறன் மேம்பாட்டு முயற்சி

சிஎஸ்.ஐ.ஆர்., என்ற அமைப்பு, ஒரு ஆற்றல் மிக்க 38 உரமும், ஊக்கமும் வாய்ந்த தேசிய ஆராய்ச்சி மையங்களையும், 39 எல்லையில்லா வெளி மையங்களும், பரந்த இந்தியா முழுமைக்கும் நிறுவிக்கப்பட்டுள்ளது. இது தொடங்கிய 1942 லிருந்து நாட்டின் அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப  வளர்சியை சிறப்பான முறையில் ஊக்குவித்ததோடு, இந்தக் கழகம் ஒரு மேம்பட்ட மனித வளத்தினை திறம்பட கட்டமைக்க உதவியுள்ளது. இதன் கல்வி மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகளின் மூலம் இதனை உருவாகியுள்ளது.

நாட்டின் வளர்ச்சியும், பொருளாதார மேம்பாடும், அந்நாட்டின் மாநில வரியான மக்கள் தொகை: ஈவுத்தொகை என்பதோடு நெருங்கிய தொடர்புடையது என்பதனை வலியுறுத்துகிறது. அது நமது மனித வளமே. இந்த மனித வளத்தை மேம்படுத்தவே இந்திய அரசு இந்த திறன் மேம்பாட்டுத்திட்டத்தை உருவாக்கியது. இந்திய அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டு பணியுடன் ஒத்துப் போகின்றபடியான ஒரு திட்டத்தை சி.எஸ்.ஐ.ஆர்.-ம் உருவாக்கி செயல்முறை  படுத்தியுள்ளது. இத் திட்டமே சி.எஸ்.ஐ.ஆர்.-ன் ஒருகிணைத்த திறன் மேம்பாட்டு முயற்சி என முன்மொழியப்பட்டு செயல்படுகின்றது. சி.எஸ்.ஐ.ஆர்.-ல் 800 க்கும் மேலான அதி திறமை வாய்ந்த  அறிவியல் & தொழில்நுட்பம் சார்ந்த வல்லுனர்களும் மற்றும் அனைத்துதுறை தொழில் நுட்ப வலுனர்களும், அதி நவீன, உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி கருவிகளையும் கொண்டு நம் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடிகிறது.

               

தொடக்கத்தில் சி.எஸ்.ஐ.ஆர். 38 ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு ஊக்குவிப்பை பல் துறைகளில் ஓரிரு வாரங்களில் நடத்தவேண்டுமென முன்மொழிந்தது பின்பு அதனை காலப் போக்கில் தேவையின் அடிப்படையில் வருங்கால கட்டத்தில் விரிவுபடுத்த திட்டமிடபட்டுள்ளது.       சி.எஸ்.ஐ.ஆர்-ன் இந்த முயற்சி பல வகையான பொருளாதார நிலையில் பின்தங்கிய ஏழை எளியவர்களுக்கும், பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்தவருக்கும், டிப்ளோமா மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கும் உகந்ததாக உள்ளது. இம் முயற்சியில் சி.எஸ்.ஐ.ஆர். சிக்ரி-யும் தென் மாநில, மண்டல மக்களுக்கும், அவர்களின் திறன் வளர்சிக்கும், சமுக பொருளாதார வளர்சிக்கும் உச்ச நிலையை எட்ட வழிவகை செய்கிறது


 1. சிக்ரியில் சி.எஸ்.ஐ.ஆர்.-ன்  ஒருகிணைந்த திறன் மேம்பாட்டு முயற்சிகள்

சி.எஸ்.ஐ.ஆர்.-ன் ஒருகிணைந்த திறன் மேம்பாட்டு முயற்சியின் அடிபடையில் சி.எஸ்.ஐ.ஆர். சிக்ரி-யிலும் பல திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் 10th / 12th/ ITI/ Polytechnic மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பயிற்சிகள் கிராமப்புற சமுதாய மக்கள் யாரெல்லாம் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்தவர்கள், கல்வியில் நலிந்தோர்கள் / ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது


 1. தமிழ் வழி பயிற்சி வகுப்புகள் (நிலை 1, II, & III)
 1. கந்தக அமில மின்கலங்கள் : பாதுகாப்பு மற்றும் பேணுதல்
 2. லித்தியம் அணுமின்கலங்கள் : அறிவியலும் & தொழில்நுடப்பமும்
 3. மின்முலாம் பூசுதல் மற்றும் உலோக புறத்தீட்டுதல் முடிவுநிலை
 4. அரிமான தடுபிற்கான : வர்ணங்கள் மற்றும் வர்ணபுச்சுகள்
 5. நூற்பாலை மற்றும் தோல்பதனிடும்  அலைக் கழிவு நீரை சுத்திகரிக்கும் தொழில் நுட்பங்கள்
 6. பகுப்பாய்வு கருவிகளின் இயங்கு முறையும் மற்றும் பேணிப் பாதுகாக்கும் முறையும்

 1. ஆங்கில வழி பயிற்சி வகுப்புகள் : நிலை IV, V, VI, & VII

மேற்குறிப்பிட்ட அணைத்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் இளநிலை/ முதுநிலை/ சுயதொழில் முனைவோர்/ புதிய தொழில் தொடங்க முனைவோர் ஆகியோருக்காக நடத்தப்பட்டு வருகின்றது. அனைத்து பயிற்சிகளும் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப் படுகின்றது. இந்தப் பயிற்சியானது பொறியியல் மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை ஊக்குவிகின்றது.


 1. பி.சி.எஸ்.சி குழுமத்தில் பதிவு மற்றும் அங்கிகாரம் பெற்ற பயிற்சி வகுப்புகள்

                1 உதவி அலங்காரச் சாயப்பூச்சு வினைஞர்  
                2. அலங்காரச் சாயப்பூச்சு வினைஞர் 
               3. பாதுகாப்பான மற்றும் கடல்சார் வர்ணபுச்சு வினைஞர்

 

திறன் ஊக்குவிப்பு மற்றும் ஆசிரியருக்கான முன்னேற்றப் பயிற்சிகள்
பள்ளி ஆசிரியர்கள் கல்லுரி பேராசிரியர்களை ஊட்டுவிபதர்ககவும் CSIR- CECRIஒரு சிறப்பு பட்டறை பயிற்சியை வடிவமைத்து அதனை நடத்திக்கொண்டும் வருகிறது . இந்த பயிற்சி ஆங்கில வழியில் நடந்தப்படுகின்றது . இந்த பயிற்சியின் மூலம் கற்பித்தல் / சோதனை ஆய்வு கூடபயிற்சி / அறிவியல் அரவம் / அறிவார்த்த சிந்தனை துண்டுதல் / புதுமை படைபாற்றல் ஆகியவற்றில் இந்தக் திறன் மேம்பாட்டை வளர்க்க உதவுகிறது. இந்த பயிற்சி ஒரு வாரத்திற்கு நடைபெறும்


 1. தொழில் / தொழில் நுட்பம் சார்ந்த புத்துணர்வு பயிற்சிகள்

சி.எஸ்.ஐ.ஆர்.- சிக்ரியில் பலதரப்பட்ட, தனித்துவமான, தொழில் நுட்பம் மற்றும் தொழிற்சாலைக்கு ஏற்ற புத்துணர்வு பயிற்சி பட்டறைகள கிழ்க்கண்ட பலதுறைகளிலும் நடத்திக்கொண்டு வருகிறது. அவைகளில் குறிப்பாக 1.அரிமானம் ஏற்படுவதற்கான அடிப்படையும் மற்றும் அதற்கான இயந்திர தொழில்நுட்பங்களும், 2. எதிர்மின்வாய் பாதுகாப்பு மற்றும் குழாய்களின் வழிகளில் அறிமானத் தடுப்பு, 3. அறிமானத் தடுப்பு வர்ணங்கள் மற்றும் வர்ணப்பூச்சுக்களின் பயன்பாடு, 4. மின்வேதியல் எரிவுட்டு கட்டமைப்பு: காரீய மின்கலங்கள், 5. மின்வேதியல் எரிவுட்டு கட்டமைப்பு: லித்தியம்-அணு மின்கலங்கள், 6. மின்முலாம் பூசுதல் - குறிகோள்கள் மற்றும் பயன்பாட்டு முறைகள், 7. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான மேற்ப்புற பூச்சுக்கள், 8. கழிவு நீர்: சுத்திகரிப்பு மற்றும் அதற்கான தொழில்நுட்பபங்கள், 9. பகுப்பாய்வு கருவிகளின் இயங்கு முறையும் மற்றும் பேணிப் பாதுகாக்கும் முறையும். இவைகளை 1. குறிகிய கால புத்துணர்வு வகுப்புகள், 2. சிறப்பு புத்துணர்வு வகுப்புகள் 3. தொழில்துறை தேவைக்கு ஏற்ப வடிவமைக்கபட்ட சிறப்பு வகுப்புகள் & 4. பன்னாட்டு தேவைக்குகேற்ப வடிவமைக்கபட்ட வகுப்புகள் என நடத்துகிறோம். இவை அனைத்தும் கல்லூரி, பல்கலைகழக மாணவர்கள், பேராசிரியர்களும், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் மற்றும் புதிய தொழில் துவங்குபவற்களுக்கும் பயன்படும் வகையாய் அமைய பெற்றுருக்கிறது


பணியாளர்களை பயிற்சி/ கருத்தரங்கு/ சிம்போசியம்/ பயிற்சிப் பட்டறை - வகுப்புகளுக்கு பிரநிதித்துவம் செய்து அனுப்புதல்
இந்தப் பிரிவில் விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் (இதில் பல தரப்பட்ட ஆய்வு திட்டங்களில் பணிபுரியும் ஆராய்ச்சி மாணவர்களும் அடங்கும்) ஆகியோருக்கான பிரதிநிதித்துவம் வேண்டி விண்ணப்பிக்கும் விண்ணபங்களை வரவேற்று, செயல்முறை படுத்தி, தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை இயங்குனர் பார்வைக்கு வைத்து இயக்குனரின் ஒப்புதலை பெற்று, பின் பயிற்றுவிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்து, பயிற்சி முடிந்த அவர்களிடம் தகுந்த அறிக்கையை பெற்று கோப்புகளை தணிக்கைக்கு தயாராக வைத்தல்.  


தொடர்புக்கு
முனைவர் எஸ். எம். ராஜேந்திரன்,
மூத்த முதன்மை விஞ்ஞானி & தலைவர்
திறன் மேம்பாட்டு பயிற்சிப் பிரிவு
சி. எஸ். ஐ. ஆர். - மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி  நிறுவனம் , காரைக்குடி
மின்அஞ்சல் : skill@cecri.res.in; rajendran_sm@rediffmail.com
கைப்பேசி எண்: 8675677493, தொலைபேசி : 04565 241521

மற்றும்
முனைவர் ச. அங்கப்பன், முதன்மை விஞ்ஞானி
திறன் மேம்பாட்டு பயிற்சிப் பிரிவு
சி. எஸ். ஐ. ஆர். - மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி  நிறுவனம் , காரைக்குடி
மின்அஞ்சல் : skill@cecri.res.in; angappan@cecri.res.in
கைப்பேசி எண்: 9994614582, தொலைபேசி : 04565 241470