பொறியியல் கவுன்சில்

கட்டிட பொறியியல் பிரிவு:
காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் 293.50 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஆய்வகத்தின் பணி செய்யக்கூடிய அலுவலர்களுக்கென்று 250 பணியாளர் குடியிருப்பு ஆய்வகத்தின் வளாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் (கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்) கட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்திற்கு சொந்தமான உலோக அரிமானத்திற்கான சோதனை மையம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தில் 55470 சதுரமீட்டர் பரப்பளவிலும் மேலும் 987 சதுரமீட்டர் பரப்பளவில் பணியாளர் குடியிருப்பு வசதியுடன் இயங்கி வருகிறது. இந்த ஆய்வகத்தினுள் பணியாளர்களுக்கான மருத்துவமனை, விருந்தினர் மாளிகை, கேந்திரிய வித்யாலயா, உடற்பயிற்சி மையம், சமுதாயக்கூடம் மற்றும் மழலையர் பள்ளி இருக்கின்றன. இவை அனைத்திற்கும் தேவையான பராமரிப்பு மற்றும் மேம்பட்டுப்பணிகளை கட்டிட பொறியியல் பிரிவு செய்து வருகிறது. விருந்தினர் மாளிகையில் 41 எண்ணிக்கையில் குளிருட்டப்பட்ட வசதி கொண்ட அறைகள் உள்ளன. ஆழ்துளை கிணறுகள் மூலமாக ஆய்வகம் மற்றும் குடியிருப்பு வளாகம் முழுவதும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சவ்வூடு பரவல் முறையில் நிறுவப்படட 1000 லிட்டர் மற்றும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு வடிப்பான்கள் மூலமாக ஆய்வகம் மற்றும் குடியிருப்பு வளாகத்திற்கு முறையே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 350 தெருவிளக்குகள் உள்ளன வேதியியல் மற்றும் மின்வேதியியல் சார்ந்த இளங்கலை தொழிற்பட்டப்படிப்பினை இந்த ஆய்வகம் அண்ணா பல்கலைக்கழகத்திடம் அனுமதி பெற்று கடந்த 25 வருடத்திற்கு மேலாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதில் மொத்தம் 150 மாணவர்கள், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை கட்டிட பொறியியல் பிரிவு திறம்பட செய்து வருகிறது. மேற்கூறிய பணிகளுடன் தேவைக்கேற்ப புதிய ஆய்வகக்கட்டிடங்களையும் நிர்மாணித்து அவைகளின் பராமரிப்பு பணிகளையும் இப்பிரிவு செயற்படுத்தி வருகிறது. இத்துடன் i) சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் பராமரித்தல் ii) அவசர பராமரிப்பு பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளுதல் iii) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு முதலியவற்றையம் இப்பிரிவு செய்து வருகிறது. இந்த மாவட்டத்திலேயே முதன் முறையாக 2,15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

.