பகுப்பாய்வு உபகரண பயன்பாட்டு மையம்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில், பொருள் பண்புக்கூறு மற்றும் பகுப்பாய்வின் உபகரண முறைகள், தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அம்சமாகும். காரைகுடியின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.இ.சி.ஆர்.ஐ.) "பகுப்பாய்வு உபகரண பயன்பாட்டு மையம் (சி.ஐ.எஃப்)" ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பல வகையான அதிநவீன பகுப்பாய்வு உபகரணங்கள் வாங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தொகுக்கப்பட்ட பொருட்களின் வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகள், அதன் தன்மை, கட்டமைப்பு, நிர்ணயம் மற்றும் ஸ்பெக்ட்ரல் அளவீடுகள் போன்றவற்றை அறிவதில் இவ்வுபகரணங்கள் பெரும் பங்களிக்கின்றன.


இதன் மூலம் சி.எஸ்.ஐ.ஆர் - சி.இ.சி.ஆர்.ஐ, இங்கு பணிபுரியும் அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு சேவையை வழங்குகிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், இங்குள்ள வசதியை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இங்குள்ள உபகரணங்கள் கீழ்கண்ட நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.


ஒளியியல் ஸ்பெக்ட்ரோஸ்கோபி நுட்பங்கள், காந்த ஒத்ததிர்வு ஸ்பெக்ட்ரோஸ்கோபி நுட்பங்கள், எக்ஸ்-ரே நுட்பங்கள், மைக்ராஸ்கோப்பிக் நுட்பங்கள், வெப்ப பகுப்பாய்வு, அடிப்படை பகுப்பாய்வு, பிரிப்பு நுட்பமான குரோமடோகிராஃபிக் நுட்பங்கள் ஆகியவை இதில் அடங்கும்.


பகுப்பாய்வு உபகரணங்ககளின் பட்டியல் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


வ. எண்

உபகாரணத்தின் பெயர்

1.

ஃபோரியர் டிரான்ஸ்ஃபார்ம் அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்
(எஃப்.டி.ஐ.ஆர்)

2.

யூவி-விசிப்பில்-என்.ஐ.ஆர். ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர்

3.

ஃப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்

4.

லேசர்  ராமன்  ஸ்பெக்ட்ரோஸ்கோபி

5.

ஃபோரியர் டிரான்ஸ்ஃபார்ம் நியூக்ளியர் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ்
ஸ்பெக்ட்ரோமீட்டர் (எஃப்.டி.என்.எம்.ஆர்)

6.

எலெக்ட்ரான் பாரா மேக்னெட்டிக் / ஸ்பின்  ரெசோனன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்
(இ.பி.ஆர் / இ. எஸ்.ஆர்)

7.

எக்ஸ்-ரே டிவ்ரேக்டோமீட்டர் (எக்ஸ். ஆர். டி.)

8.

எக்ஸ்-ரே டிவ்ரேக்டோமீட்டர் (எக்ஸ். ஆர். டி.) - பல்நோக்கு

9.

எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் (எக்ஸ். ஆர். எஃப்.)

10.

எக்ஸ்-ரே ஃபோட்டோ எலெக்ட்ரான் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (எக்ஸ்.பி.எஸ்)

11.

இமேஜ் பகுப்பாய்வி உலோகவியல் நுண்ணோக்கி

12.

ஸ்கேனிங் எலெக்ட்ரான்  நுண்ணோக்கி (எஸ்.இ.எம்.)

13.

புலம் உமிழ்வு ஸ்கேனிங் எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோபி  (எஃப்.இ.எஸ்.இ.எம்.)

14.

டிரான்ஸ்மிஷன் எலெக்ட்ரான் நுண்ணோக்கி (டி. இ.எம்.)

15.

உயர் பிரித்தறிதல் டிரான்ஸ்மிஷன் எலெக்ட்ரான் நுண்ணோக்கி (எச்.ஆர்.டி.இ.எம்.)
ஆற்றல் பரவக்கூடிய எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபியுடன் (இ.டி.எஸ்.)

16.

உயர் பிரித்தறிதல் டிரான்ஸ்மிஷன் எலெக்ட்ரான் நுண்ணோக்கி (எச்.ஆர்.டி.இ.எம்.)

17.

ஸ்கேனிங் ப்ரோப் மைக்ரோஸ்கோபி (எஸ்.பி.எம்)

18.

முனை மேம்படுத்தப்பட்ட ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (டி. இ.ஆர்.எஸ்)

19.

துகள் அளவு பகுப்பாய்வி (பிஎஸ்.எ)

20.

உயர் செயல்திறன் திரவ குரோமடோகிராபி (எச்.பி.எல்.சி.)

21.

ஜெல் ஊடுருவல் குரோமடோகிராபி (ஜிபிசி)

22.

ஜி.சி-எம்.எஸ்  குரோமடோகிராபி -ஸ்பெக்ட்ரோஸ்கோபி

23.

வெப்பநிலை பண்பேற்றப்பட்ட வேறுபட்ட ஸ்கேனிங் கலோரிமெட்ரி (டி.எம்.டி.எஸ்.சி)

24.

ஒரே நேர வெப்ப பகுப்பாய்வி டிஜிஎ / டிடிஎ / டிஎஸ்சி

25.

தானியங்கி வெப்ப பகுப்பாய்வி - டிஜிஎ / டி.எஸ்.சி.

26.

அட்டாமிக் அப்ஸார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர் (எ.எ.ஸ்)

27.

சி.எச்.என்.எஸ். எலமெண்டல்  அனலைசர்

28.

மைக்ரோ ஹார்ட்நெஸ் டெஸ்டர்

சேவைகள்:

மாதிரிகளின் பகுப்பாய்வு:

 • இந்த பகுப்பாய்வு வசதிகள் பிற கல்வி நிறுவனங்கள், தனியார் ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் மாதிரிகளுக்கு, கட்டண அடிப்படையில்  முன்னுரிமை வழங்கப்படுகிறது.

 • தொழில்நுட்ப விவரங்கள், கட்டணங்கள் மற்றும் தேவையான கோரிக்கை படிவங்களுக்கான வலைத்தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

  பயிற்சித் திட்டம்:

  முறையான வேண்டுகோளின் பேரில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை பணியாளர்களின் நலனுக்காக “பகுப்பாய்வுக்கான கருவி முறைகள்” குறித்த பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் கல்லூரிகளில் கற்பித்தல் குழுவிலுள்ளோர் மற்றும் தொழில் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் பயனடைகிறார்கள்.

  புதுப்பிப்பு பாடநெறி:

  ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் நுட்பங்கள், அதிர்வு நுட்பங்கள், மேற்பரப்பு பகுப்பாய்வு நுட்பங்கள், எக்ஸ்ரே நுட்பங்கள், குரோமடோகிராஃபிக் நுட்பம் மற்றும் பொருட்களின் சிறப்பியல்புக்கான வெப்ப பகுப்பாய்வு போன்ற பல்வேறு பகுப்பாய்வு நுட்பங்களில் வெளிப்பாட்டை வழங்குவதற்காக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  இந்த பாடநெறி முக்கியமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியாளர்களுக்கானது. தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் பணிபுரியும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், இயற்பியல் மற்றும் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், அவர்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக பகுப்பாய்வு நுட்பங்களில் இத்தகைய பயிற்சியைப் பெறுகிறார்கள்.

  மேற்கண்ட நுட்பங்கள் அந்தந்த கருவிகளுடன் விளக்கம் அளிக்கப்படுகிறது.


  சான்றிதழ் பாடநெறி:
  அதிநவீன பகுப்பாய்வுக் கருவிகளின் செயல்பாட்டில் மற்றும் பராமரிப்பில் திறன் மேம்பாடு. எக்ஸ்ரே நுட்பங்கள், இமேஜிங் நுட்பங்கள், ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் நுட்பங்கள் மற்றும் வெப்பவியல் போன்ற பகுப்பாய்வுக் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் தெளிவு பெற இந்த திட்டம் உதவுகிறது. இது தொழில் துறையில் தொழில் தேடும் படித்த இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

  வடிவமைக்கப்பட்ட திட்டம்:

 • தொழில்துறையின் வகையைப் பொறுத்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க தகுந்த பகுப்பாய்வு நுட்பங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

  தொடர்புகொள்ள:

  முனைவர். சீ.  இராதாகிருஷ்ணன்
  தலைமை விஞ்ஞானி
  துறை தலைவர்
  அதிநவீன பகுப்பாய்வு உபகரண பயன்பாட்டு மையம்
  தொலைபேசி: 04565-241533            கைப்பேசி: 9444061582
  மின்னஞ்சல்: sradhakrishnan@cecri.res.in

  தொழில்நுட்ப விவரங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டணங்கள் பற்றி அறிவதற்கு கீழ்கண்ட வலைத்தள முகவரியை கிளிக் செய்க.
                                 https://cecri.res.in/SAIF/index.html

  கோரிக்கை படிவம் பெறுவதற்கு கீழ்கண்ட வலைத்தள முகவரியை கிளிக் செய்க.
                                http://www.analyticsir.in/app/tfm/logi