மின் வேதியியல் சக்தி ஆதாரங்கள் துறை - கண்ணோட்டம்

1. குறிக்கோள்:

  • மேம்பட்ட ஆற்றல் சேமிப்பு துறையில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை நடத்துதல்
  • மேம்பட்ட மின்கல செயல்திறன் சோதனை மற்றும் மதிப்பீட்டு வசதிகள் மூலம் மின்கல தொழிற்சாலைகளின்   தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
  • ஆற்றல் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் தொடர்புடைய தொழிற்சாலைகளுடன் இணைந்து பணியாற்றுவது
  • நாட்டிற்கான ஆற்றல் சேமிப்பு இலக்குகளை சீரமைத்து செயல்படுவது

2. பார்வை:
இந்தியாவை குளுமையாக மாற்ற கூடிய மின் இயக்கம் மற்றும் ஆற்றல் சேமிப்பு  போன்றவற்றின் மூலம் புதுமையான மற்றும் மேம்பட்ட ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களுக்கான முன்னணி / முன்மாதிரியான ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்தல்.


3. எங்களை பற்றி:
மின்கலன்கள் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்வேதியியல் செல்களைக் கொண்ட ஒரு ஆற்றல் சேமிப்பு சாதனமாகும், அவை சேமிக்கப்பட்ட வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும்  மற்றும் ஆற்றலை வழங்கும் மூலமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் மின்கலன்களை ஒரு பகுதி பொருளாக கொண்டு அதாவது கார்கள், தொலைத்தொடர்பு அமைப்புகள், தடையில்லா மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், மின்சார வாகனங்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் இயங்கி வருகிறது. மின்கலன்களை கொண்டு தற்போதைய எண்ணெயைச் சார்ந்திருப்பதை இடமாற்றம் செய்யவும் அதாவது தூய்மையான, நம்பகமான மற்றும் மலிவான வகையில் மின்சார சேவைகளை  உலக அளவில் வழங்கி சிறந்த இலக்கை அடைய முடியும். மலிவு மின்கல சேமிப்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நிலைத்தன்மையின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகக் கருதப்படுகிறது.


ஈ.சி.பி.எஸ் என அழைக்கப்படும் மின் வேதியியல் சக்தி ஆதாரங்கள் துறை கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உயர் தொழில் சம்பந்தம், சமகால மற்றும் அடுத்த தலைமுறை எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை நோக்கிய மின் வேதியியல் ஆற்றல் சேமிப்பு சாதனங்கள் (மின்கலன்கள்) குறித்த அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்குவதன் மூலம் தன்னை வேறுபடுத்துகிறது.


ஈசிபிஎஸ்@சிஇசிஆர்ஐ தற்போது ஆறு கருப்பொருள் பகுதிகளில் பின்வருமாறு செயல்படுகிறது:

  • காரிய அமில மின்கலன்
  • லித்தியம் அயன் மின்கலன்
  • பாய்வு மற்றும் உலோக காற்று மின்கலன்
  • சோடியம் அயன் மின்கலன்
  • லித்தியம்- கந்தகம் மின்கலன்
  • அதிமின்தேக்கிகள்.

      கருப்பொருள் பகுதி விவரங்கள்


ஒழுங்கமைக்கப்பட்ட ஆராய்ச்சி குழு இந்தியாவின் நிலைத்தன்மையின் குறிக்கோள்களுக்கு பொருத்தமான தொழில்நுட்ப களங்களை உள்ளடக்குவதற்கான மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்கிறது, அத்துடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி சேமிப்பு தீர்வுகளில் உலகத் தலைவராக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. அரசு நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து அறிவு பகிர்தல், தொழில் நுட்பாங்களை மேம்படுத்துதல்  மற்றும் ஆற்றல் சேமிப்பில் உள்ள பிரச்சனைகளை களைதல் போன்றவற்றில் ஈ.சி.பி.எஸ் பிரிவு தனித்து இயங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி (எஸ்இஆர்பி), அணு அறிவியல் ஆராய்ச்சி வாரியம் (பிஆர்என்எஸ்) மற்றும் பிற தேசிய நிதி அமைப்புகளால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் வரம்பை ஈசிபிஎஸ் பிரிவு செயல்படுத்துகிறது. ; நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் நிறுவனங்களுடன் ஒத்துழைக்கிறது மற்றும் பயன்பாட்டுத் துறையில் குறிப்பாக ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்கிறது.


ஈ.சி.பி.எஸ் பிரிவில் விஞ்ஞானிகள் (13), தொழில்நுட்ப அதிகாரிகள் (4), ஆராய்ச்சி அறிஞர்கள் ஜே.ஆர்.எஃப் & எஸ்.ஆர்.எஃப் (..) மற்றும் திட்ட உதவியாளர்கள் (..) ஆகியோர் பரந்த திறன்கள் மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்; தேசிய எரிசக்தி சேமிப்பு இலக்குகளை அடைவதற்கும், உலகளாவிய பொருத்தமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஒரு துடிப்பான, பலதரப்பட்ட மற்றும் கூட்டு ஆராய்ச்சி சூழலை உருவாக்குதல். மேலும், பி.டெக், எம்.எஸ்சி, எம்.டெக் மற்றும் எம்.பில். பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் எங்கள் விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் தங்கள் ஆராய்ச்சி / திட்டப்பணிகளை மேற்கொள்கின்றனர்.


ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் நடவடிக்கைகள் தவிர, மின் வேதியியல் சக்தி அமைப்புகள் (காரிய அமில மின்கலன் மற்றும் லித்தியம் அயன் மின்கலன்  தொழில்நுட்பங்கள்) ஆகிய துறைகளில் தொழில்துறை / கல்வி சார்ந்த தொழில்நுட்பம் / புதுப்பிப்பு படிப்புகள் / திறன் மேம்பாட்டு பட்டறைகளையும் இந்த பிரிவு வழங்குகிறது.


ஈசிபிஎஸ்@சிஇசிஆர்ஐ இன் வரலாற்றில் ஈர்க்கக்கூடிய தருணங்கள்:


1988 - நிக்கல்-இரும்பு, விஆர்எல்ஏ, மக்னீஷியம் கரிம மின்கலன்களின் வளர்ச்சிக்கு டிஆர்டிஓவிடம் இருந்து மானியம் பெறப்பட்டது
1998 - லித்தியம் பாலிமர் மின்கலன்களின் வளர்ச்சிக்கு சி.எஸ்.ஐ.ஆரிடமிருந்து மானியம் பெறப்பட்டது
2008 - சூரிய ஒளிமின்னழுத்த பயன்பாடுகளுக்கான மின்கலன்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு எம்.என்.ஆர்.இ யிலிருந்து மானியம் பெறப்பட்டது
2011 - டாப்சன்
2014 - மல்டிஃபன்
2014 - மின்கலன் செயல்திறன் சோதனை மற்றும் மதிப்பீட்டு மையம் (பிபிடிஇசி) வசதிக்கான என்ஏபிஎல் அங்கீகாரம்
2017 - காரிய அமில மின்கலன் உற்பத்தி தொழில்நுட்பத்திற்கான திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவுதல்
2018 - மின்கலன் செயல்திறன் சோதனை மற்றும் மதிப்பீட்டு மையம் (பிபிடிஇசி) வசதிக்காக பிஐஎஸ் அங்கீகாரம்
2019 - சூரிய மின்கலன் சோதனைக்கு எம்.என்.ஆர்.இ அங்கீகரிக்கப்பட்ட வசதி
2019 - ஆற்றல் சேமிப்பக சாதனங்களுக்கான சி எஸ்ஐஆர் - சி இ சி ஆர் ஐ இன் சோதனை தளம்
2020 - லித்தியம் மின்கலன் உற்பத்தி வசதி
2020 - கோவிட் -19 இலிருந்து பாதுகாக்க 3D அச்சிடக்கூடிய முகம் கவசம் மற்றும் வென்டிலேட்டரின் வடிவமைப்பு


முக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்:

M / s லிவ்கார்ட்  பேட்டரிகள், ஹெச்பி
M / s டுராசெல், பெங்களூரு
M / s இண்டஸ் டவர், குருகிராம்
M / s எக்ஸைடு, கொல்கத்தா / ஓசூர்
M / s ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நவி மும்பை
M / s டி வி எஸ் மோட்டார்ஸ், ஓசூர்
M / s  எனர்சிஸ், ஹைதராபாத்
M / s அப்ளைடு மெட்ரியல்