பாதுகாப்பு

பாதுகாப்பு என்பது தனிநபர்களின் நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றும் இதன் குறைபாடு ஒரு அமைப்பின் செயல்திறனை நேரடியாக பாதிக்கும் அம்சமாகும், மற்றும் உயிர், சொத்து இழப்புகளை விளைவிக்கும். நாசவேலை மற்றும் தேசிய விரோத கூறுகளால் பாதுகாப்பை வெளிப்புறமாக மீற முடியும் என்றாலும், பாதுகாப்பு விதிமுறைகள் தனிநபர்களால் கடைபிடிக்கும் பொழுது இழப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியும். எனவே, நிறுவனத்தில் பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்க்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

சி.எஸ்.ஐ.ஆர்-செக்ரி வளாகம் என்பது அலுவலக கட்டிடங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், குடியிருப்புகள், விருந்தினர் மாளிகை, விடுதிகள், பள்ளிகள், வங்கி, தபால் அலுவலகம் போன்றவற்றைக் உட்கொண்ட பாதுகாப்பான சூழலில் உள்ளது. தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகள், முதலுதவி கருவிகள், ஆய்வக கோட்டுகள், கையுறைகள், காலணிகள், நீர், அவசரகால வெளியேற்றங்கள், அவசர தொடர்பு தகவல், பாதுகாப்பு நடைமுறைகள் போன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் பாதுகாப்பு நிர்வாகம் உறுதி செய்கிறது.

  • இரசாயன பாதுகாப்பு, மின் பாதுகாப்பு, தீ பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆய்வக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது,
  • ரசாயனங்களின் சேமிப்பு, அகற்றல் மற்றும் பெயரிடல் குறித்து சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு பிரிவினரால் ரசாயனங்களின் பட்டியல் பராமரிக்கப்படுகிறது.
  • உயர் மின் அழுத்த பெட்டிகள், சரியான இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. உயர் மின்னழுத்தத்தை தாங்கக்கூடிய கையுறைகள், ரப்பர் பாய்கள் ஆகியவை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு வகையான தீ பரவலை தடுப்பதற்கான தீயணைப்பு கருவிகள் அணைத்து ஆய்வக கட்டிடங்களில் நிலைநிறுத்தப்பட்டு அவற்றை இயக்க ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேக கட்டுப்பாடு மேடுகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. நிறுவனம் மற்றும் காலனியில் உள்ள சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேக வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களான ஏப்ரன்கள், கோட்டுகள், கையுறைகள், கண்ணாடி, சுவாசக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு காலணிகள் ஆகியவை வழங்கப்பட்டு அவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அலுவலக கட்டிடங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், குடியிருப்புகளில் முதலுதவி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வளாக பாதுகாப்பை பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் 30 பாதுகாப்பு காவலர்கள் நிர்வகிக்கின்றனர்.