மின்முலாம் பூசுதல் மற்றும் உலோக சீரமைப்பு துறை- செயல்திறன்

ஆராய்ச்சி செயல்பாடுகள்:

மின்முலாம் பூசுதல்

 • குரோமியம்(III) மின்பகுளியை பயன்படுத்தி  குரோமியம் மின்முலாம் பூசுதல்

 • தாமிரம், நிக்கல், துத்தநாகம் மற்றும் இதன் உலோகக் கலவைகள் & கலப்புரு மின்முலாம் பூசுதல்

 • தங்கம் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்களை மின்முலாம் பூசுதல்

 •  நீரில்லா அயனி மின்பகுளிகளை பயன்படுத்தி அலுமினியம், டான்டலம், இற்றியம் மின்முலாம் பூசுதல்

 • மின்முலாம் பூசுதலின் போது, இடைமுக செயல்முறைகளை புரிந்துகொள்ளுதல்

 • துருவேறா எஃகினை மின்மெருகூட்டல்

 • அலுமினியம் நேர்மின்முனை பூச்சு

 • உலோகம் மற்றும் உலோககலவைகளை தூரிகை மின்முலாம் பூசுதல்

 •  உலோகம் மற்றும் உலோககலவைகளை மின்-துடிப்பு மற்றும் மின்-தலைகீழ்துடிப்பு முறையில் மின்முலாம் பூசுதல்

 • மின்னில்லா உலோக பூச்சு

 • சயனைடு இல்லாத மின்பகுளியை பயன்படுத்தி பித்தளை மின்முலாம் பூச்சு

 • மின்னுருவக்கல்

பூச்சுகள்

 • இயற்பொருள் ஆவிப்பூச்சு

 • வெப்ப ஆவிப்பூச்சு

 • மின்னணுக்கற்றை ஆவிப்பூச்சு

 • டி.சி./ஆர்.எப். மேக்னெட்ரான் தெறித்துப் பூசுதல்

 • அயனிசார் ஒருகுவிய டி.சி. மேக்னெட்ரான் தெறித்துப் பூசுதல்

 • துடிப்பு சீரொளிப்பூச்சு

 • தெளிப்பு பூச்சுகள்

 • வெப்பத்தடுப்பு பூச்சுகள்

 • சுழற்முறை பூச்சு

 • களிகூழ்ம பூச்சுகள்

 

மின்னுலோகவியல்

 • உருகிய-உப்பு மின்னாற்தேற்றல் மூலம் சோடியம், லித்தியம், கால்சியம், மக்னிசீயம் உருவாக்குதல்

 • உருகிய-உப்பு மின்னாற்தேற்றல் மூலம் லாந்தனம், சீரியம், நியோடிமியம், சமேரியம், யூரோபியம், பிரசியோடைமியம் மற்றும் நியோடிமியம்-இரும்பு,  சமேரியம்-கோபால்ட் போன்ற உலோககலவைகளை உருவாக்குதல்

 • உருகிய-உப்பு தொழிற்நுட்பங்கள் மூலம் அரியமண்- மற்றும் இடைநிலை- உலோக போரைடுகள், ஆக்சைடுகள், மீநுண்-கரிக் குழாய்கள், ஒற்றையடுக்கு கரி மற்றும் வெப்பமின் பொருட்களை உருவாக்குதல்

 • தாது மற்றும் ஈய-அமில மின்கல கழிவிலிருந்து நீர்மின்னாற்தேற்றல் மூலம் ஈயத்தை பிரித்தல்

 • குறைந்த தர இந்திய தாதுகள் மற்றும் தொழிற்ச்சாலை கழிவுகளில் இருந்து நீர்மின்னாற்தேற்றல் மூலம் காமா-மாங்கனீஸ்-டைஆக்சைடு உருவாக்குதல்

 • முதன்மை மற்றும் இரண்டாம் நிலை வளங்களிலிருந்து துத்தநாகம் மற்றும் துத்தநாக ஆக்சைடை உருவாக்குதல்

 • பயன்படுத்தப்பட்ட வினையூக்கியிலிருந்து பிளாட்டினம் குழு உலோகங்களை பிரித்தல்

 • மின்னாற்தேற்றல் / மின்தூயதாக்கல் செயல்முறைகளில் மாசுகளின் பங்கு குறித்த ஆராய்ச்சிகள்