எல்லை மையங்கள்:  சென்னை - செயல்திறன்

எரிபொருள் செல் ஆராய்ச்சி புதிய மில்லினியம் (NMITLI) இந்திய தொழில் நுட்ப தலைமை முயற்சி திட்டத்தின் கீழ் அதன் சகோதரி ஆய்வகங்களுடன் (Sister's laboratory) இணைந்து சி.எஸ்.ஐ.ஆர்- NCL, சி.எஸ்.ஐ.ஆர் -NPL மற்றும் KPIT, Reliance & Thermax தனியார்துறைகளின் ஆதரவுடன் LT and HT 5-10 KW PEMFC ஆட்டோமொபைல் மற்றும் Telephone Tower பயன்பாடுகளுக்காக உருவாக்கி நிரூபித்துள்ளது. லித்தியம் அயன் பேட்டரிக்கான இந்தியத் தொழில் நுட்பம் இம் மையத்தில் உருவாகியுள்ளது.

இந்த மையத்தில் சி.எஸ்.ஐ.ஆர் நிதி உதவியுடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் வாகனங்களுக்குப் பொருத்தமான லித்தியம் அயன்பேட்டரி இந்தியத் தொழில் நுட்பம் துவங்க, டிசம்பர் 29, 2019 அன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான மத்திய அமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஹர்ஷ வர்தன் அவர்கள் புதுமைத் தொழில் நுட்ப மையத்தின் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் முனைவர் சேகர் மாண்டே மற்றும் சிக்ரி இயக்குநர் முனைவர் கலைச்செல்வி அவர்களின் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சி.எஸ்.ஐ.ஆர் குழும ஆய்வகங்களின் இயக்குநர்கள் முனைவர் பி.கே. சிங், முனைவர் சந்திரசேகர், முனைவர் ஸ்ரீராம், சிக்ரியின் முன்னாள் இயக்குநர் முனைவர் கே.ஐ. வாசு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். முனைவர். சந்தோஷ் கபூரியா வரவேற்புரை வழங்க முனைவர் ஆர்.பி. சிங் (சி.எஸ்.ஐ.ஆர் தலைமை அலுவலகம்) நன்றி நவில விழா இனிதே நிறைவேறியது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை பேட்டரிகளான சோடியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் சல்ஃபர் பேட்டரி ஆகிய தொழில் நுட்பங்களும் இம் மையத்தில் உருவாக்கப்படும்.